சேலம் : கடந்த (12/6/2023) முதல் (24/6/2023), வரை 14ம் சிறப்பு காவல் படை பழனியில் ஊர்க்காவல் படையினருக்கான மாநில அளவிலான மாநில பேரிடர் மீட்பு படையின் பயிற்சி நடைபெற்றது. இதில் உடற்பயிற்சி, கவாத்து, படகு போட்டி, தீயணைப்பு மீட்பு முதலுதவி மற்றும் எழுத்து தேர்வு உள்ளிட்ட அனைத்து போட்டிகளிலும் ஒட்டுமொத்தமாக சேலம் மாவட்ட ஊர்க்காவல் படையினர் திரு.சிவா HG 116 முதலிடமும், திரு.ராஜ கணேஷ் HG 384 இரண்டாம் இடமும் வென்றனர். மேலும் திரு.ராம்குமார் HG 211 திரு.சந்துரு HG 425 ஆகியவர் மேற்படி போட்டிகள் மற்றும் தேர்வில் தேர்ச்சி பெற்றனர். மேற்படி போட்டிகளில் வென்றவர்கள் (26/6/2023),ஆம் தேதி சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சிவக்குமார் அவர்களை மாவட்ட காவல் அலுவலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்நிகழ்வின் போது திரு.தனசேகர் சேலம் மாவட்ட ஊர்க்காவல் படையின் மண்டல தளபதி மற்றும் திருமதி.தீக்ஷிதா சேலம் மாவட்ட ஊர்க்காவல் படையின் துணை மண்டல தளபதி ஆகியோர் உடன் இருந்தனர்.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஜாபர்