ராமநாதபுரம் : ராமநாதபுரம் சாயல்குடி, கோவாவில், நடைபெற்ற மாநில அளவிலான கபடி போட்டியில் தமிழ்நாட்டில் இருந்து தேனி, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்த கபடி வீரர்கள் பங்கேற்றனர். மாநில அளவில் 18 அணிகள் பங்கேற்றன. இதில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த சாயல்குடி, கடலாடி, முதுகுளத்தூர் பகுதிகளை சேர்ந்த ஆர். ஆர். அணியின் ராகுல்குமரன் தலைமையில் பங்கேற்ற மாணவர்கள் முதல் பரிசான தங்கத்தை வென்று சாதனை படைத்துள்ளனர்.
நேற்று கோவாவில் இருந்து சாயல்குடி திரும்பிய கபடி வீரர்களை சாயல்குடி வழிவிடு முருகன் கோவில் அருகில் சாயல்குடி இன்ஸ்பெக்டர் ஜெய்சித்ரா, முன்னாள் பேரூராட்சி துணை தலைவர் காமராஜ், கடலாடி தி.மு.க. முன்னாள் நகர் செயலாளர் முனியசாமி, மாணவர்களின் பெற்றோர்கள், கிராம பொதுமக்கள் மாலை அணிவித்து சால்வை மற்றும் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அடுத்த மாதம் நேபாளத்தில் நடைபெறும் கபடி போட்டியில் கலந்துகொள்ள இந்த மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர். அவர்களுக்கு தமிழக அரசு நிதி உதவி அளிக்க வேண்டும் என கபடி வீரர்கள், பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
