திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காட்டில் மாநில அளவிலான துப்பாக்கிச் சுடு போட்டி நடைபெற்றது. இதில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவர்கள் கலந்து கொண்டனர். குறிப்பாக பழவேற்காடு பகுதி சுற்றியுள்ள அனைத்து கிராம மாணவர்களும் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளராக அட்சுவா அறக்கட்டளை இயக்குனர் எஸ்.கே.செல்லதுரை, தாங்கல் பெரும்புலம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஞானவேல், பள்ளியின் முதல்வர் முஹம்மத் ஜமீல் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் அரங்கம் குப்பம் கிராம பொதுமக்கள்,கிராம நிர்வாகிகள் மற்றும் மாணவர்கள் பெற்றோர்கள் இதில் கலந்து கொண்டனர். பிளாக் பெல்ட்ஃபோர்த் டான் அண்ட் சிலம்பம் கன் ஷூட்டிங் யோகா மாஸ்டர்
அரங்கம் குப்பம் மாஸ்டர் சின்னராசு நிகழ்ச்சி ஏற்பாடு செய்தார்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு