சென்னை : இன்று தமிழக காவல்துறையில் பணியாற்றும் காவல்துறை தலைவர்கள் மற்றும் அதற்கு மேல் பதவியில் உள்ள உயர் அதிகாரிகளுக்கான வருடாந்திர துப்பாக்கி சுடுதல் போட்டி சென்னை மருதம் கமாண்டோ பயிற்சி துப்பாக்கி சூடு மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கலந்து கொண்ட மத்திய மண்டல காவல்துறை தலைவர் திரு.கார்த்திகேயன் ஐ.பி.எஸ், அவர்கள் ரைபிள் துப்பாக்கி சுடுதல் போட்டியில் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வெள்ளி பதக்கத்தை கைப்பற்றி இரண்டாம் இடம் பிடித்தார். இந்த துப்பாக்கி சுடுதல் போட்டியில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தை தாம்பரம் மாநகர காவல் துறை ஆணையர் மற்றும் காவல்துறை கூடுதல் இயக்குனர் திரு.அமல்ராஜ் ஐ.பி.எஸ், அவர்களும் மூன்றாவது இடம் பிடித்து வெண்கல பதக்கத்தை மேற்கு மண்டல காவல்துறை தலைவர் திரு. சுதாகர் ஐ.பி.எஸ், அவர்களும் வென்றார்கள் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அதிகாரிகளுக்கு சான்றிதழும் பதக்கமும் வழங்கி தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் முனைவர் திரு. சைலேந்திரபாபு ஐ.பி.எஸ், அவர்கள் வாழ்த்து தெரிவித்தார்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

A. கோகுல்