திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் மாநில அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது. இதில் ஆந்திர பிரதேசம் மாணவர்கள்,சென்னையை சுற்றியுள்ள மாணவர்கள், திருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மாணவர்கள் என மொத்தம் 70க்கும் மேற்பட்ட மாணவர்கள் இதில் கலந்து கொண்டனர். 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கபதக்கம் வென்றனர். முப்பதுக்குக்கும் மேற்பட்ட மாணவர்கள் வெள்ளி பதக்கம் வென்றனர்.16 மாணவர்கள் வெண்கலம் பதக்கம் வென்றனர். இதில் பழவேற்காடு மாணவர்கள் அதிக தங்க பதக்கங்களை வென்று தரவரிசையில் முதலிடம் பிடித்தனர். கராத்தே மாஸ்டர் அரங்கம் குப்பம் சின்ராஸ் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த போட்டியில் அட்சுவா இயக்குனர் எஸ்.ஏ.செல்லதுரை, தி.மு.க திருவள்ளூர் கிழக்கு மாவட்ட மீனவரணி துணை தலைவர் ஜெயபால், முன்னாள் தாங்கல் பெரும்புலம் ஊராட்சி மன்ற தலைவர் ஞானவேல் உள்ளிட்ட முக்கிய பழவேற்காடு பகுதி முக்கிய நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு