தமிழகத்தில் 27 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் 19 காவல் உயரதிகாரிகளை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, சேலம், திருப்பூர், திருநெல்வேலி, மாநகர காவல் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை துறையில் காவல் துணை ஆணையர்களாக நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
- ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பி .தங்கதுரை, மதுரை மாநகர காவல் சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
- கோயம்புத்தூர் மாநகர சட்டம் ஒழுங்கு காவல்துறை ஆணையர் திரு. ஜி. ஸ்டாலின், மதுரை மாநகர தலைமையிட துணை ஆணையராகவும்,
- சென்னை Establishment ஏஐஜி திரு ஈஸ்வரன், மதுரை மாநகர போக்குவரத்து துணை ஆணையராகவும்
- கோயம்புத்தூர் கோயம்புத்தூர் தலைமையிட துணை ஆணையர் திரு.டி. ஜெயச்சந்திரன், ஐபிஎஸ் கோயம்புத்தூர் மாநகர சட்டம் ஒழுங்கு காவல் ஆணையர் ஆகவும்
- சென்னை தமிழ்நாடு போலீஸ் அகாடமி காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ். செல்வராஜ், கோயம்புத்தூர் மாநகர தலைமை தலைமையிட காவல் துணை ஆணையராகவும்
- சென்னை பூந்தமல்லி 13வது பட்டாலியன் தமிழ்நாடு சிறப்பு படை கமாண்டன்ட் திரு. எஸ். ஆர். செந்தில்குமார், கோயம்புத்தூர் மாநகர காவல் போக்குவரத்து துணை ஆணையராகவும்
- சென்னை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் கண்காணிப்பாளர் திரு.சக்திவேல், திருச்சி மாநகர சட்ட ஒழுங்கு காவல் துணை ஆணையராகவும்
- கோயம்புத்தூர் மாநகர காவல் போக்குவரத்து காவல் துணை ஆணையர் திரு.முத்தரசு, திருச்சி மாநகர காவல் குற்றம் மற்றும் போக்குவரத்து காவல் துணை ஆணையராகவும்
- சென்னை லஞ்ச ஒழிப்பு தடுப்பு பிரிவு தெற்கு சரக காவல் கண்காணிப்பாளர் திரு.என். மோகன்ராஜ், சேலம் மாநகர காவல் சட்டம் ஒழுங்கு காவல் துணை ஆணையராகவும்
- திருச்சி மாநகர குற்றம் மற்றும் போக்குவரத்து காவல் துணை ஆணையர் திரு.ஆர்.வேதரத்தினம்,சேலம் மாநகர காவல் குற்றம் மற்றும் போக்குவரத்து காவல் துணை ஆணையராகவும்
- திருவண்ணாமலை காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். அரவிந்த், திருப்பூர் மாநகர சட்ட ஒழுங்கு காவல் துணை ஆணையராகவும்
- சென்னை குற்றப்பிரிவு சிஐடி 3 காவல் கண்காணிப்பாளர் திரு.ரவி, திருப்பூர் மாநகர காவல் குற்றம் மற்றும் போக்குவரத்து பிரிவு காவல் துணை ஆணையராகவும்
- சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்தார் திரு. எம். ராஜராஜன், திருநெல்வேலி மாநகர காவல் சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் துறை ஆணையராகவும்
- திருப்பூர் மாநகர காவல் குற்ற மற்றும் தடுப்பு பிரிவு போக்குவரத்து சட்டம் ஒழுங்கு காவல்துறை ஆணையராக இருந்த சுரேஷ்குமார், திருநெல்வேலி மாநகர காவல் குற்றம் மற்றும் போக்குவரத்து காவல் துணை ஆணையராகவும்
- சென்னை பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு காவல் கண்காணிப்பாளர் திரு. எம். தில்லை நடராஜன், சென்னை பொருளாதார குற்றப்பிரிவு 3 காவல் கண்காணிப்பாளர் ஆகவும்
- கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பண்டி கங்காதர் ஐபிஎஸ், சென்னை லஞ்ச ஒழிப்பு தடுப்பு பிரிவு சிறப்பு புலனாய்வு பிரிவு காவல் கண்காணிப்பாளர் ஆகவும்
- சென்னை தலைமையிட ஏஐஜி திருமதி.V. சியாமளா தேவி, லஞ்சம் ஒழிப்பு தடுப்பு பிரிவு மத்திய மண்டலத்தில் காவல் கண்காணிப்பாளர் ஆகவும்
- தமிழ்நாடு பால் உற்பத்தி கூட்டுறவு நிறுவனத்தின் காவல் கண்காணிப்பாளர் திரு ரோஹித் நாதன் ராஜகோபால் ஐபிஎஸ், சென்னை சைபர் செல் சிபிசிஐடி காவல் கண்காணிப்பாளராக ஆகவும்
- திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. A. மயில்வாகனன், லஞ்ச ஒழிப்பு தடுப்பு பிரிவு தெற்கு மண்டல காவல் கண்காணிப்பாளர் ஆகவும் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
இதற்கான உத்தரவை இன்று கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.எஸ். கே. பிரபாகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://tnpolice.news/43276/