மதுரை: மதுரை மாநகர் மடீட்சியா அரங்கில் மாநகர காவல் துறை சார்பாக மகளிர் தின விழா நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது. விழாவை காவல் ஆணையர் முனைவர் திரு.J.லோகநாதன் IPS., அவர்கள் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்கள். மேலும் காவல் ஆணையர் அவர்கள் பெண்ணின் பெருமைகள், முன்னேற்றங்கள் குறித்தும் சிறப்புரையாற்றினார்.துணை ஆணையர் தலைமையிடம், போக்குவரத்து ஆகியோர் உடன் இருந்தனர். உதவி ஆணையர்கள் மற்றும் பெண் காவலர்கள் கலந்து கொண்ட விழாவில் மதுரா கல்லூரி பேராசிரியர் திருமதி.விமல் சிறப்புரை ஆற்றினார். மேலும் பரதநாட்டியம்,குழுநடனம் , பாடல், மேஜிக் நிகழ்ச்சி போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி