நெல்லை: நெல்லை மாநகரில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஏராளமானோர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் ஆரோக்கியநாதபுரத்தில் அலெக்சாண்டர் என்பவர் 140 கிலோ புகையிலை பொருட்களை வீட்டில் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர். 40 கடைகளுக்கு புகையிலை பொருட்களை விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரிய வந்தது.
புகையிலை பொருட்களை விற்பவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.மாநகர காவல் துணை ஆணையர்(சட்டம்-ஒழுங்கு) திரு.சுரேஷ்குமார் எச்சரித்துள்ளார்.