தமிழ்நாடு காவலர் தினத்தை முன்னிட்டு, தாம்பரம் மாநகர காவல் தலைமை அலுவலகத்தில் சிறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவின் ஒரு பகுதியாக, தாம்பரம் மாநகர காவல் ஆணையர் . அபின் தினேஷ் மோதக், இ.கா.ப., அவர்கள் தாம்பரம் ஆயுதப்படை (Quarter Guard, Guard of Honour) ஏற்றுக்கொண்டார். இந்த நிகழ்வு, காவல் துறையினரின் சேவை மற்றும் அர்ப்பணிப்பை போற்றும் பெருமைமிகு மரபை பிரதிபளிக்கிறது. காவல் துறையின் முக்கிய நோக்கமான நேர்மை, ஒழுக்கம் மற்றும் பொதுமக்களுக்கான சேவை ஆகியவற்றை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், தாம்பரம் மாநகரில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் காவலர் தின உறுதிமொழி எடுக்கப்பட்டது. மற்றும் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலையின் போது உயிர்த் தியாகம் செய்த எத்திராஜுலு, சார்பு ஆய்வாளர் அவர்களுக்கு, குன்றத்தூர் காவல் நிலையத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த அஞ்சலி நிகழ்வை தாம்பரம் காவல் துணை ஆணையாளர், அவர்கள் முன்னின்று நடத்தினார்.
இதில் காவல் துறையின் வரலாறு குறித்த கண்காட்சிகள், கலை நிகழ்ச்சிகள் மற்றும் காவல்துறைக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்தும் சமூக நல நிகழ்வுகளும் இந்த தினத்தின் நிகழ்ச்சிகளில் இடம் பெற்றன. மேலும், மாணவர்களின் பங்களிப்பை ஊக்குவிக்கவும், காவல்துறையின் பங்கு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பள்ளி மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டிகளும் நடத்தப்பட்டன. நிகழ்ச்சியின் முடிவில், காவல் துறையினரிடையேயும் அவர்களின் குடும்பத்தினரிடையேயும் ஒற்றுமையையும் நல்லுறவையும் வளர்க்கும் வகையில் பாரம்பரிய பரா கானா (Bara Khana) விருந்து நடைபெற்றது. இந்த தருணத்தில், தாம்பரம் மாநகர காவல் ஆணையர் .அபின் தினேஷ் மோதக், இ.கா.ப., அவர்கள் தாம்பரம் மாநகர காவல்துறையைச் சேர்ந்த அனைத்து அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு, அவர்களின் அர்ப்பணிப்பு, ஒழுக்கம் மற்றும் சமுதாயத்திற்கான முன்மாதிரியான சேவைக்காக தனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்தார்.
மேலும், சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவதிலும், பாதுகாப்பு, மற்றும் பொதுமக்கள் நம்பிக்கையை உறுதி செய்வதிலும் காவல்துறையின் முக்கிய பங்கை அவர் மீண்டும் எடுத்துரைத்தார். நிகழ்ச்சியின் முடிவில், காவல் துறையினரிடையேயும் அவர்களின் குடும்பத்தினரிடையேயும் ஒற்றுமையையும் நல்லுறவையும் வளர்க்கும் வகையில் பாரம்பரிய பரா கானா விருந்து நடைபெற்றது. இந்த தருணத்தில், தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அபின் தினேஷ் மோதக், இ.கா.ப., அவர்கள் தாம்பரம் மாநகர காவல்துறையைச் சேர்ந்த அனைத்து அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு, அவர்களின் அர்ப்பணிப்பு, ஒழுக்கம் மற்றும் சமுதாயத்திற்கான முன்மாதிரியான சேவைக்காக தனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்தார். மேலும், சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவதிலும், பாதுகாப்பு, மற்றும் பொதுமக்கள் நம்பிக்கையை உறுதி செய்வதிலும் காவல்துறையின் முக்கிய பங்கை அவர் மீண்டும் எடுத்துரைத்தார்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அன்பழகன்