திருச்சி: தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் கடந்த 2023-ம் ஆண்டு இரண்டாம் நிலை காவலர்கள், தீயணைப்புத்துறை மற்றும் சிறைத்துறை காவலர் பதவிக்கு நடைபெற்ற எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற கூடுதல் தேர்வாளர்களுக்கு திருச்சி மாநகர கே.கே.நகர் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற உள்ள உடற்தகுதி தேர்வில் கலந்து கொள்ள மொத்தம் 998 தேர்வாளர்களுக்கு அழைப்பு கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.
இத்தேர்வில் கடந்த 20.08.24 மற்றும் 21.08.24-ந்தேதிகளில் கலந்து கொண்ட 782 கூடுதல் தேர்வாளர்களில் 369 தேர்வாளர் 1.சான்றிதழ்கள் சரிபார்ப்பு 2.உயரம் மற்றும் மார்பளவு சரிபர்த்தல் 3.சகிப்புதன்மை சோதனை என 3 நிகழ்வுகளில் தகுதி பெற்று அடுத்த நிகழ்வான 1).நீளம் தாண்டுதல் (அ) உயரம் தாண்டுதல், 2). 100 மீட்டர் / 400 மீட்டர் ஓட்டம், கயிறு ஏறுதல் ஆகிய நிகழ்வுகளில் 365 தேர்வாளர்கள் கலந்து கொண்டனர். இதில் 04 தேர்வாளர்கள் கலந்துகொள்ளவில்லை.
மேலும் இந்த உடற்தகுதி தேர்வின் சிறப்பு மேற்பார்வை அதிகாரியான (Super Check Officer) திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி.ந.காமினி, இ.கா.ப., அவர்கள் நேரில் ஆய்வு செய்தும், பணியில் இருந்த காவல் அதிகாரிகளுக்கு தகுந்த அறிவுரைகள் வழங்கினார்கள். இத்தேர்வின்போது துணை குழுதலைவர் (Sub-committee Chairman) திருச்சி மாநகர துணை ஆணையர்(வடக்கு) திரு.S.செல்வகுமார் அவர்கள் உடனிருந்தார்கள்.