திருச்சி: திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி.ந.காமினி,இ.கா.ப., அவர்களின் உத்தரவின்பேரில், (29.02.2024)-ந்தேதி காந்திமார்க்கெட் சரகம், பாலக்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சங்கிலியாண்டபுரம் S.J திருமண மண்டபத்தில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு, திருச்சி மாநகர காவல்துறை சார்பில் ‘சமூக நல்லிணக்க விழிப்புணர்வு கூட்டம்” (Awareness Programme on Social HARMONY) நிகழ்ச்சி (29.02.2024)ந்தேதி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் காவல் துணை ஆணையர் வடக்கு, சமூக நலத்துறை & குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள், காவல் உதவி ஆணையர், காந்திமார்க்கெட் சரகம் மற்றும் காவல் ஆய்வாளர் கலந்து கொண்டார்கள்.
இக்கூட்டத்தில் நமது அரசியல் அமைப்பின்படி தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டது எளவும், தீண்டாமையை அடிப்படையாகக் கொண்டு, எவர் மீதும் தெரிந்தோ, தெரியாமலோ சமூக வேற்றுமையை, மனம், வாக்கு, செயல் என்ற எந்த வகையிலும் கடைப்பிடிக்க கூடாது. அரசியல் அமைப்பின் அடிப்படைக் கருத்திற்கு இணங்க சமய வேறுபாடற்ற சுதந்திர சமுதாயத்தை உருவாக்குவதில் நேர்மையுடனும், உண்மையுடனும் இருப்பது பொதுமக்களாகிய நமது கடமையாகும் என்பதும் வலியுறுத்தப்பட்டது. மேலும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் சமூகம் (SC/ST) முன்னேற்றத்திற்காக அரசால் பல்வேறு நல திட்டங்களின் மூலம் என்னென்ன உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. என்பன குறித்து விரிவாக எடுத்துரைத்தார்கள். மேற்படி இடத்தில் நடைபெற்ற சமூக நல்லிணக்க விழிப்புணர்வு கூட்டத்தில் பொதுமக்கள் சுமார் 100-க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றார்கள்.