சென்னை: சென்னை மாநகராட்சியில் மண்டல அலுவலராக பணிபுரிந்த செந்தில்முருகன், திண்டுக்கல் மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து அவர் திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார். கடந்த நான்கு ஆண்டுகளில் மாநகராட்சியின் 4-வது ஆணையராக இவர் பொறுப்பேற்கிறார். மாநகராட்சியிடம் இருந்து தனியார் அபகரித்த சிறுவர் பூங்காவை மீட்பது மற்றும் மாநகராட்சி வருவாயை அதிகரிப்பது, மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகள் உள்ளிட்ட பல சவால் புதிய ஆணையர் முன் காத்திருக்கின்றன.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா