ஈரோடு : ஈரோடு மாவட்டம், கொடுமுடியில் செயல்பட்டு வரும் பானுமதி மருத்துவமனையில் மருத்துவர் எஸ். பானுமதி அவர்களிடம் சிகிச்சைக்காக சென்ற வசந்தா ( வயது 31 ). என்ற பெண்மணிக்கு சிகிச்சைக்காக டாக்டர் எஸ் பானுமதி அவர்களால் பெண்ணுக்கு நிவாரண மாத்திரைகள் வழங்கப்பட்டது. அதில் இரவு நேரத்திற்கு உரிய ஒருவேளைக்குரிய மாத்திரையை அவர் உன்றுவிட்டார். அந்த பெண்ணுக்கு இரவு முழுவதும் உடல் சார்ந்த தொந்தரவுகள் அதிகரித்துள்ளது. காலை வேலைக்கு உரிய மாத்திரையும் சாப்பிட்டால் உடல் உபாதை சரியாகிவிடும் என்று பெண் மாத்திரையை சாப்பிட எடுத்தபோது மாத்திரை அட்டைக்குள் புழு பூச்சிகள் இருந்ததால் பெண் நோயாளி வசந்தா அதிர்ச்சி அடைந்தார். அவர் அளித்த வாக்குமூலத்தின் பெயரில் இது போன்று எத்தனை பெண்களுக்கு இந்த மருத்துவர் இந்த தரமற்ற மாத்திரையை வழங்கி உள்ளார். என்பது தெரியவில்லை. அதேபோல் தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதிலும் இந்த தரமற்ற மாத்திரை எத்தனை விற்று உள்ளது, அதை எத்தனை பெண்கள் உபயோகித்து நோய்வாய்ப்பட்டுள்ளார்கள் என்பதும் தெரியவில்லை.
ஈரோடு மாவட்டத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஜெ.கோபாலகிருஷ்ணன்