வேலூர்: வேலூர் சரக காவல் அலுவலகத்தில் உள்ள கலந்தாய்வு கூடத்தில் வேலூர் சரக காவல்துறை துணை தலைவர் முனைவர் திரு. M.S. முத்துசாமி இ.கா.ப., அவர்களின் தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வேலூர் ராணிப்பேட்டை திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் அவர்கள் மற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.