விழுப்புரம் : விழுப்புரம் சரக காவல் துறை துணை தலைவர் திரு.பாண்டியன் IPS., அவர்களின் தலைமையில் குற்ற கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட காவல் அலுவலகத்தில் உள்ள கருத்தரங்க கூடத்தில் நடைபெற்றது. முதலாவதாக மாவட்ட காவல் மைதானத்தில் காவல்துறை அரசு வாகனங்கள் அனைத்தும் ஆயுதப்படை ஆய்வாளர் திரு.முத்துக்குமரன் மற்றும் உதவி ஆய்வாளர் திரு.கல்யாணராமன், அவர்களின் தலைமையில் மாவட்டத்தில் உள்ள இருசக்கர வாகனங்கள் 29ம் நான்கு சக்கர வாகனங்கள் 67 மொத்தம் 96 வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அவ்வாறு உட்படுத்தப்பட்ட வாகனங்களின் பராமரிப்புகள் குறித்த ஆய்வினை விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் திரு.ஸ்ரீநாதா IPS., அவர்களால் ஆய்வு செய்யப்பட்டது.
குற்ற கலந்தாய்வு கூட்டத்தில் மாவட்டத்தில் நடைபெற்ற குற்ற சம்பவங்கள் குறித்தும்.
நிலுவையில் உள்ள வழக்குகள் பற்றியும். நீதிமன்றத்தால் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிடியாணைகள் குறித்தும். கைது செய்யக்கூடிய வழக்குகளில் தலைமறைவு குற்றவாளிகளை உடனுக்குடன் கைது செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என பேசப்பட்டது.
இக்கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் துணை காவல் கண்காணிப்பாளர்கள் காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் கலந்துகொண்டனர்.