விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம் மற்றும் மாவட்ட காவல் மைதானத்தில் வாகன பராமரிப்பு ஆய்வும் நடைபெற்றது
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஸ்ரீநாதா இ.கா.ப, அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கோட்டத்தில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் திரு தேவராஜ், திரு.கோவிந்தராஜ் மற்றும் விரல் ரேகை பதிவு கூடம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. சோம சுந்தரம் மற்றும், உதவி காவல் கண்காணிப்பாளர் திரு அபிஷேக்குப்தா இ. கா.ப மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர்கள், காவல் நிலைய ஆய்வாளர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதில் மாவட்டத்தில் நடைபெறும் குற்ற சம்பவங்கள் குறித்தும்,
கஞ்சா குட்கா வழக்குகள் குறித்தும், நிலுவையில் உள்ள வழக்குகளின் குற்றவாளிகளை விரைந்து நீதி மன்ற காவலுக்கு அனுப்ப எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும் போக்குவரத்து சீரமைப்புகள் மற்றும் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.