இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற ஆய்வுக் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி.D.V.கிரண் ஸ்ருதி, இ.கா.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் முக்கிய வழக்குகளான கொலை,அடிதடி மற்றும் திருட்டு வழக்குகள் குறித்து மேற்கொள்ளப்பட வேண்டிய தொடர் நடவடிக்கைகள் குறித்தும், ரவுடிகள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கை குறித்தும்,
மாவட்டத்தில் உள்ள முக்கிய வழக்குகளில் புலன் விசாரணை குறித்தும், நீதிமன்ற நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும், பிடிகட்டளையில் நிலுவையில் உள்ள வழக்குகளில் குற்றவாளிகளை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்வது குறித்தும்,
கள்ளச் சந்தையில் மது விற்பனையில் ஈடுபடும் நபர்கள் கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் கடத்துபவர் மற்றும் விற்பவர் மீது நடவடிக்கை மேற்கொள்வது குறித்தும், அறிவுரை மற்றும் ஆலோசனை வழங்கினார்.
இதில் கடந்த மாதம் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர்கள் உதவி ஆய்வாளர்கள் உட்பட காவல் ஆளிநர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார்.