குமரி: கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.திரு.இரா.ஸ்டாலின் IPS அவர்கள் தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் மாவட்ட ஆயுதப்படையில் வைத்து இன்று 14-02-2025 நடைபெற்றது. இதில் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்,
காவல் நிலையங்களில் கொடுக்கப்படும் புகார்களின் விசாரணையை மேம்படுத்த வேண்டும்,
காவல் நிலையங்களிலும், பொது இடங்களிலும் பொதுமக்களிடம் மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும்,
குற்றவாளிகள் மீதான கைது நடவடிக்கையை தீவிரப்படுத்தவேண்டும்,
பெருங்குற்றங்கள் மற்றும் திருட்டு குற்றங்கள் அதிகம் நடந்த இடங்களை கண்டறிந்து கண்காணிப்பை தீவிரப்படுத்தி சிசிடிவி கேமரா பொருத்துவதை உறுதி செய்ய வேண்டும்,
காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அனைத்து கிராமங்களிலும் சிசிடிவி கேமரா அமைப்பதை உறுதி செய்ய வேண்டும்,
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களின் புகார் மீது எவ்வித தாமதமும் இன்றி வழக்குபதிவு செய்து விசாரணை செய்ய வேண்டும்,
விபத்துக்கள் ஏற்படுவதை தவிர்க்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார்கள்.
மேலும் கடந்த ஜனவரி மாதத்தில் சிறப்பாக பணிபுரிந்த அரசு குற்ற வழக்கறிஞர்கள், போலீசார், மற்றும் ஊர்க்காவல் படையினரை பாராட்டி சான்றிதழ் வழங்கினார்கள்.
இந்த கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர், அனைத்து உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள், அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், மேலும் மருத்துவத்துறை, குழந்தைகள் நல அலுவலர், அரசு குற்ற வழக்கறிஞர்கள் உட்பட அனைத்துதுறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.