திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தாலுகா உட்பட்ட மீஞ்சூர் பேரூராட்சி கவுன்சிலர் கூட்டம் பேரூராட்சி தலைவர் திருமதி. ருக்மணி மோகன்ராஜ், தலைமை தாங்கினார். துணைத் தலைவர் திரு. பா.அலெக்சாண்டர், செயல் அலுவலர் வெற்றியரசு ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசுகையில் தங்களது பகுதிகளில் உள்ள பல்வேறு திட்டங்களை குறித்து கோரிக்கையை முன் வைத்தனர்.
இந்த கூட்டத்தில் வார்டு கவுன்சிலர்கள் திரு.நக்கீரன், திரு.அபூபக்கர், திரு.பாஸ்கர், திரு.துரைவேல்பாண்டியன், திரு.ராஜன், திருமதி. ஜெயலக்ஷ்மி தன்ராஜ், திருமதி. சுகன்யா, திருமதி. பரிமளம்அருண்குமார், திருமதி. சுமதி தமிழ் உதயன், திருமதி. கவிதா சங்கர், திருமதி. சங்கீதா சேகர், திருமதி. மோனிகா ராஜேஷ் ,திருமதி. ஜெயலட்சுமி ஜெய்சங்கர், திருமதி. குமாரிபுகழேந்தி, மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். கூட்டம் முடிவில் பேரூராட்சி இள நிலை உதவியாளர் திரு.அன்பரசன், நன்றி கூறினார்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு