சென்னை: சென்னை பெருநகரில் “போதை தடுப்புக்கான நடவடிக்கை” (Drive against Drugs) மூலம் கஞ்சா, குட்கா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
இதன் தொடர்ச்சியாக, மாதவரம் துணை ஆணையாளர் திரு.E. சுந்தரவதனம் , இ.கா.ப. , அவர்கள் தலைமையில் , உதவி ஆய்வாளர் திரு.அசோக், தலைமைக்காவலர் திரு.சரவணன் ( த.கா.35547), முதல்நிலைக் காவலர்கள் மணி (மு.நி.கா.31093), ஸ்ரீதர் (மு.நி.கா .36893),
நளங்கிள்ளி (மு.நி.கா.33341), தினேஷ் (மு.நி.கா.29921) காவலர் சதிஷ் (கா.39093), ஆயுதப்படை காவலர்கள் அருண்குமார் ( கா. 53251), முபஷீர் (கா 53004 ) மற்றும் ரஞ்சித் (கா.53260 ) ஆகியோர் அடங்கிய காவல் குழுவினர் 23.07.2021 அன்று காலை செங்குன்றம், மொண்டியம்மன் நகர் சோதனைச் சாவடியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது,
அவ்வழியே வேகமாக வந்த நான்கு சக்கர வாகனத்தை நிறுத்தி விசாரணை செய்தனர். மேலும், சோதனை செய்தபோது, அதில் சட்டவிரோதமாக, பெருமளவு கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
அதன்பேரில், காவல் குழுவினர், நான்கு சக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தி வந்த சதிஷ்குமார், 33, தேனி மாவட்டம் மற்றும் பாண்டியன் 34, தேனி மாவட்டம் ஆகிய 2 நபர்களை கைது செய்தனர்,
அவர்களிடமிருந்து 120 கிலோ கஞ்சா மற்றும் 1 கார் கைப்பற்றப்பட்டது. மேற்படி குற்றவாளிகள் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்த மாதவரம் துணை ஆணையாளர் திரு.சுந்தரவதனம், இ.கா.ப., அவர்கள் தலைமையிலான காவல் குழுவினரை, சென்னை பெருநகர காவல் ஆணையானர் திரு.சங்கர் ஜிவால் , இ.கா.ப. , அவர்கள் அன்று நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.