திருவாரூர்: முத்துப்பேட்டை பகுதியில் பள்ளி மாணவர்களிடையே மதநல்லிணக்கத்தை வளர்க்கும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.C.விஜயகுமார் IPS அவர்களின் ஏற்பாட்டின்பேரில்
கடந்த 30.09.2021 அன்று முத்துப்பேட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளியில் முத்துப்பேடையில் ஒன்றிய அளவிளான பள்ளி மாணவ மாணவியர்களுக்கான மதநல்லிணக்க பேச்சு போட்டி, கட்டுரை போட்டி மற்றும் ஒவிய போட்டி ஆகியவை நடைபெற்றது. இப்போட்டியில் முத்துப்பேட்டை ஒன்றியத்தை சேர்ந்த
1) அரசு மேல்நிலைப்பள்ளி– முத்துப்பேட்டை
2) அரசு உயர்நிலைப் பள்ளி – ஆலங்காடு
3) 0MA – மெட்ரிக் பள்ளி – ஆலங்காடு
4) ரஹமத் பெண்கள் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி – முத்துப்பேட்டை
5) K.A.P. பெண்கள் மேல்நிலைப்பள்ளி – முத்துப்பேட்டை
6) சரவஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி – முத்துப்பேட்டை
7) மிலோனியம் மெட்ரிக் பள்ளி – ஆலங்காடுஆகிய
7 பள்ளிகளை சேர்ந்த 89 மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
கலந்துகொண்ட பள்ளியில்1)சரவஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவியர்கள் 08 பேரும்
2)K.A.P. பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவியர்கள் 05 பேரும்
3)ரஹமத் பெண்கள் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி பள்ளி மாணவ மாணவியர்கள் 04 பேரும்
4)அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவியர்கள் ஒருவரும்
5. அரசு உயர்நிலைப் பள்ளி மாணவ மாணவியர்கள் ஒருவரும் மொத்தம் 19 மாணவர்கள் வெற்றி பெற்றார்கள்.
வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்
இன்று (04.10.2021) நேரில் அழைத்து பாராட்டினார்கள்.
மேலும் இந்நிகழ்சியில் பள்ளியின் ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் முத்துபேட்டை காவல் துணை கண்காணிப்பாளர் ஆகியோர்கள் கலந்துகொண்டனர்.
திருவாரூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அந்தோணி ராஜா