தென்காசி : செஞ்சிலுவை சங்கத்தின் முன்முயற்சியின், காரணமாக 1864 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12 சுவிட்சர்லாந்து நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான ஜெனீவா நகரில் வைத்து உலகநாடுகளிடையே போர் நடைபெரும்போது போர் வீரர்களை எப்படி நடத்தப்படவேண்டும் என்ற உலகலாவிய சட்டம் இயற்றப்பட்டதை நினைவு கூறும் விதமாக, இன்று தென்காசி புதிய பேருந்து நிலையத்தின் முன் கல்லூரி மாணவ மாணவிகள் இணைந்து ஜெனீவா ஒப்பந்த தினத்தை நினைவு கூறும் விதமாக மனித சங்கலியை ஏற்படுத்தினர். இந்த நிகழ்ச்சியை தென்காசி ரெட் கிராஸ் சொசைட்டி பொருளாளர் திரு. கருப்பையா அவர்கள் முன்னிலையில் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கிருஷ்ணராஜ் IPS, அவர்கள் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் 300க்கும் மேற்பட்ட பல்வேறு கல்லூரி மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.