கோவை : கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் திரு. செல்வநாகரத்தினம் இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் அன்னூர் மற்றும் சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காவல் துறையினர் தனியார் மற்றும் அரசு பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இன்று (20.11.2021) குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், குழந்தை திருமணம், போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள், சக மாணவ மாணவிகளிடையே ராக்கிங் செய்வதால் ஏற்படும் விளைவுகள், குற்றங்களை தடுப்பது பற்றியும்,போக்சோ,
சிசிடிவி கேமரா பொருத்துதல்,சாலை விதிகளை பின்பற்றுவது பற்றியும், தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம், கொரோனா பரவும் தீவிரம் பற்றியும்,மன அழுத்தமா? போதைக்கு அடிமையா? குடும்பப் பிரச்சனையா? கவலை வேண்டாம் உடனே அழைத்திடுங்கள் விடியலை-04222300999 என்று விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தெரிவித்திட கோவை மாவட்டக் காவல் கட்டுப்பாட்டு அறை எண் 9498181212 மற்றும் வாட்ஸ்அப் எண் 7708100100 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
![](https://tnpolice.news/wp-content/uploads/2021/06/gokul.png)
A. கோகுல்