திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி V.சியாமளா தேவி அவர்களின் உத்தரவின் பேரில், 09.02.2026) SJHR உதவி ஆய்வாளர்கள் தலைமையில் ஆலங்காயம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் வாணியம்பாடி கல்லூரி (NCC) மாணவ மாணவியர்களுக்கும் பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் POCSO சட்டம், குழந்தை திருமணம் தடுப்பு, இணையவழி குற்றங்கள், போதைப் பொருட்கள் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. மேலும், அவசர உதவி எண்கள் 181, 1098 மற்றும் Kaaval Udhavi App பயன்பாடு குறித்தும் பொதுமக்களுக்கு விளக்கப்பட்டது.
















