திருவண்ணாமலை: ஆரணி நெசல் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் நெசவுத் தொழிலாளி.இவருக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர்.இவரது மூத்த மகள் 12-ம் வகுப்பும், இளைய மகள்10-ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் முருகேசன் தனது மூத்த மகள் குணஸ்ரீயுடன் ஆரணி காவல் துணை கண்காணிப்பாளர் (பயிற்சி)திரு. சுரேஷ் பாண்டியன் அவர்களை சந்தித்து தனக்கு 2 பெண் குழந்தைகள் இருப்பதாகவும்,அவர்களில் மூத்த மகள் பிளஸ் 2 பயில்வதாகவும்,இரண்டாவது மகள் பத்தாம் வகுப்பும் படித்து வருவதாகவும் அவர்களுக்கு இணைய வழியில் கல்வி பயில ஒரு ஸ்மார்ட்போன் மட்டுமே உள்ளது. மேலும் ஒரு ஸ்மார்ட்போன் வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
இவர்களது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட டி.எஸ்.பி திரு.சுரேஷ் பாண்டியன் தன்னுடைய சொந்த செலவில் ரூபாய் 12 ஆயிரம் மதிப்பிலான ஸ்மார்ட் போனை வாங்கி பிளஸ் 2 பயிலும் குணாஸ்ரீயிடம் வழங்கினார்.