சென்னை: பூக்கடை காவல் மாவட்டத்திற்குட்பட்ட பகுதியில் வசிக்கும் மாணவி 27.06.2021 அன்று காலை கொண்டித்தோப்பு, சுந்தர முதலி தெருவில் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொள்வது பற்றி வீடு வீடாக சென்று விழிப்புணர்வு பணி செய்து கொண்டிருந்த போது, அங்கு வீட்டிலிருந்த ஒரு நபர் மேற்படி மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்துள்ளார்.
மேற்படி சம்பவம் குறித்து மாணவி W10 பூக்கடை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில் போக்சோ சட்டப்பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
W10 பூக்கடை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்து, வழக்கில் சம்மந்தப்பட்ட வாலாராம், 45 கொண்டிதோப்பு என்பவரை கைது செய்தனர். மேலும் மேற்படி வாலாராம், மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.