திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் திருமதி. V.சியாமளா தேவி., அவர்களின் உத்தரவின் பேரில் சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.ரவீந்திரன் அவர்கள் முன்னிலையில் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையம் சார்பாக இன்று 30.10.2025 MKJC கல்லூரி வாணியம்பாடியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு சைபர் கிரைம் விழிப்புணர்வு வழங்கப்பட்டது. மேலும் இணையவழி நிதிமோசடி சம்பந்தப்பட்ட குற்றங்கள் பற்றியும் அக்குற்றவாளிகளிடமிருந்து எவ்வாறு தங்களை தற்காத்துக் கொள்வது என்பது பற்றியும், சமூக வலைதள குற்றங்கள் பற்றியும், வலைதளங்களை எவ்வாறு பாதுகாப்பாக உபயோகப்படுத்துவது என்பது பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் சைபர் கிரைம் சம்பந்தப்பட்ட புகார்களை பதிவு செய்யும் வலைதளமான www.cybercriyme.gov.in, இலவச தொலைபேசி எண் 1930 பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
 
                                











 
			 
		    



