விருதுநகர்: விருதுநகர் மாவட்டம்காரியாபட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அருப்புக்கோட்டை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு. சகாயஜோஸ் அவர்கள் தலைமையில்,
காரியாபட்டி காவல்நிலைய உதவி ஆய்வாளர்கள் திரு. அசோக் குமார் மற்றும் திருமதி.ஆனந்தஜோதி ஆகியோர் உட்பட போலீசார், மாணவிகளுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு சம்பந்தமான விழிப்புணர்வு கருத்துக்களையும்
அவசர உதவிக்கு தொடர்பு கொள்ள வேண்டிய இலவச தொலைபேசி எண் 181 மற்றும் 1098 கொண்ட துண்டு பிரசுரங்களையும் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.