இராமநாதபுரம்: முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி அறிவியல் ஆசிரியர் ஹபீப் முஹமது, 32. இவர் தன்னிடம் பயிலும் மாணவிகளிடம் அலைபேசி மூலம் ஆபாசமாக பேசி பாலியல் தொந்தரவில் ஈடுபடுவதாக சமூக ஊடகங்களில் தகவல் பரவியது.
அதன் அடிப்படையில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான தடுப்புகாவல் கூடுதல் எஸ்பி லயோலா இக்னேஷியஸ் தலைமையில் குழுவினர் விசாரித்தனர். விசாரணையில், ஆசிரியர் ஹபீப் முகமது ஜூன் 18 ஆம் தேதி, மாணவி ஒருவரின் வாட்ஸ்அப் எண்ணிற்கு செய்திகள் அனுப்பியதாகவும்,அதே மாணவிக்கு ஜூன் 19ல் போன் செய்து பாலுணர்வை தூண்டும் வகையில் ஆசிரியர் பேசி, பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரிய வந்தது.
மாணவியின் பெற்றோர், புகாரின்பேரில், முதுகுளத்தூர் போலீசார் வழக்கு பதிந்து ஹபீப் முஹமதுவை செய்தனர். இவர் வேறு யாருக்கேனும் பாலியல் தொல்லை தந்திருந்தால் 94981 29498, 94432 82223, 94982 07461, 94431 33948, 83000 00592 ஆகிய எண்களில் புகார் தெரிவிக்கலாம் என ராமநாதபுரம் எஸ்.பி கார்த்திக் தெரிவித்துள்ளார்.