திருவள்ளூர் : செங்குன்றம் அடுத்த மொண்டியம்மன் நகரில் அமைந்துள்ள எலைட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவர் மன்றம் காவல்துறை உயர் அதிகாரிகள், மருத்துவர்களுடன் கொரோனா காலத்தில் மாணவ-மாணவிகள் வெளியில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்? கொரோனா தொற்று ஏற்படாமல் இருப்பதற்கான ஆலோசனை கலந்துரையாடல் நிகழ்ச்சி ஆன்லைனில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு புழல் சரக உதவி ஆணையர் ராம. ஸ்ரீகாந்த் தலைமை தாங்கினார். எலைட் பள்ளியின் துணை முதல்வர் பிரமோத் வரவேற்புரையாற்றினார்.
சென்னை பெருநகர காவல் வடக்கு மண்டல இணை ஆணையாளர் வி.பாலகிருஷ்ணன், மருத்துவர்களுடன் 20 மாணவர்கள் கலந்துரையாடினர். மாணவ-மாணவிகளின் பல்வேறு கேள்விகளுக்கு மருத்துவர்களும் காவல்துறை உயர் அதிகாரிகளும் பதில் அளித்தனர். பொது இடங்களில் மாணவ-மாணவிகள் கொரோனா தொற்று ஏற்படாமல் இருப்பதற்கான ஆலோசனைகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையையும் எடுத்துரைத்தனர் .
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்