விழுப்புரம்: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் விழுப்புரம் மாவட்ட பிரிவு நேரு யுவகேந்திரா சங்கம் மற்றும் நாட்டு நலப்பணித்திட்டம் ஆகியவைகள் இணைந்து
இன்று 10.09.2021 காலை 06.30 மணி அளவில் எம்ஜிஆர் உள்விளையாட்டு அரங்கத்தில் துவங்கி மராத்தன் ஓட்டப் பந்தயத்தில் இரண்டு கிலோமீட்டர் வரை கடந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முடிக்கப்பட்டது.
இம்மராத்தான் போட்டியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஸ்ரீநாதா IPS அவர்கள் முதல் இடத்தினையும்
இரண்டாமிடத்தை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.கோவிந்தராஜு அவர்களும், மூன்றாம் இடத்தை மாவட்ட விளையாட்டு துறை அலுவலர் திரு. வேல்முருகன் அவர்களும் பெற்றனர்.
மேலும் ஐந்து பிரிவுகளாக பிரிக்கப்பட்டு மாணவர்கள் காவலர்கள், பெண் காவலர்கள், மற்றும் விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை பெற்றனர்.