திருநெல்வேலி: நெல்லையில் இரு பள்ளி மாணவர்கள் மோதல், விசாரணைக்கு அழைத்து வந்த 45 மாணவர்களை 1330 திருக்குறள் எழுதிவிட்டு செல்லுமாறு பாளையங்கோட்டை காவல் ஆய்வாளர் தில்லைநாகராஜன் உத்தரவு பிறப்பித்துள்ளது சமூக வலைதளங்களில் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.
கடந்த இரு நாட்களுக்கு முன்பு திருநெல்வேலி வ.உ.சி மைதானத்தில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளுக்கு பிறகு நெல்லையில் புகழ்பெற்ற இரு பள்ளி மாணவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஒருவொருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டனர் .
மாணவர்கள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவர்களுக்கும் அவர்தம் பெற்றோருக்கும் அறிவுரை கூறியிபின் அவர்கள் தவறை உணர்ந்து மன்னிப்பு கோரினர்.
மாணவர்கள் அவரது தவறை உணர வேண்டும் மேலும் இது போன்ற செயல்பாடுகளில் வருங்காலத்தில் ஈடுபடக் கூடாது என்பதால் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் அனைவரும் 1330 திருக்குறளையும் ஒருமுறை எழுத வேண்டும் என பாளையங்கோட்டை ஆய்வாளர் தில்லை நாகராஜன் கூறியதால் , 1330 திருக்குறளையும் எழுதி இன்று காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
பாளைங்கோட்டை ஆய்வாளரின் நூதன முயற்சி மாணவர்களை நல்வழிப்படுத்தும் .