சிவகங்கை : சிவகங்கை மாவட்ட படிப்பு வட்டத்தில் படித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (குரூப் 2) வில் முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்று தேர்ச்சியாளர்களுக்கு தமிழக அரசின் சார்பில் நடைபெற உள்ள முதன்மை தேர்வு தயாரிப்பு குறித்த வழிகாட்டி நிகழ்ச்சி சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு தெரிவிக்கையில் தமிழக அரசின் சார்பில் தமிழக முதலமைச்சர் மு. க.ஸ்டாலின், உத்தரவின் பேரில் படிப்பு ஓட்டத்தில் தொடர்ந்து போட்டி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன அதனை விரிவாக்கம் செய்யும் பொருட்கள் காரைக்குடி சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு ஆகிய மூன்று இடங்களில் போட்டி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன அவ்வாறு பயிற்சியளிக்கப்பட்டு படிப்பு வட்டத்தில் போட்டி தேர்வுக்கான பயிற்சி பெற்ற இளைஞர்கள் மொத்தம் 72 தேர்ச்சியாளர்கள் முதல் தேர்வில் வெற்றி பெற்று இருக்கிறார்கள். அதுமட்டுமில்லாத மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் முதன்மை தேர்வுக்கான வகுப்பு துவங்கப்பட்டுள்ளது சிவகங்கை படிப்பு வட்டத்தில் 200 மாணவர்களும் காரைக்குடியில் படிப்பு வட்டத்தில் 300 தேர்வாளர்களும் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர் குரூப் 2 மட்டும் இல்லாமல் குரூப் 4 குரூப்-1 மற்றும் மத்திய அரசின் ssc போலீஸ் ரெகுயிர்மெண்ட் டிஆர்பி எக்ஸாம் அனைத்து போட்டி தேர்விலும் வெற்றி பெற நல்ல வழிகாட்டுதலான படிப்போட்டத்தில் படித்து பயன்பெறக் கூடிய அளவிற்கு பயிற்சி வகுப்புகள் செயல்பட்டு வருகின்றன.
இளைஞர்கள் முதல் தேர்வில் தேர்ச்சி பெற்று முதன்மை தேர்விற்கு செல்லும் பேச்சாளர்கள் தேசிய ஒருமைப்பாடு குறித்த கண்ணோட்டம் தெருவாளர்களுக்கு இருக்க வேண்டும் அடிப்படை பண்பு என்னும் படிப்பு வட்டத்தில் பயிற்சி பெறும் பயிற்சியாளர்களுக்கு நேற்று முதல் 100 நாட்கள் உள்ளது எனவே வாரவாரம் தொடர்ந்து மாதிரி தேர்வுகள் நடத்தப்பட உள்ளன இதனை பயன்படுத்தி அனைத்து தேர்ச்சியாளர்களும் படிப்பு வட்டத்தில் தவறாது கலந்து கொண்டு மாதிரி தேர்வில் படித்து தேர்ச்சி பெற்று முதன்மை தேர்விற்கு தேர்ச்சி பெற்றிட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தெரிவித்தார்.
இளைஞர்களுக்கான உங்களுக்கு முதன்மை தேர்வுக்கு உண்டான புதுப்புது புத்தகங்கள் வாங்கி படிப்பு வட்டத்தில் வைக்கப்பட்டுள்ளன அதனை நல்ல முறையில் பயன்படுத்தி உங்களை நல்ல முறையில் உருவாக்க தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் உங்களுக்கு பாடங்களை நன்றாக நடத்த உள்ளனர் மேலும் படிப்பு ஓட்டத்தில் அனைவரும் இதனை பயன்படுத்தி முதன்மை தேர்வில் வெற்றி பெற வாழ்த்துகிறேன் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் சிவகங்கை மாவட்ட திட்ட இயக்குனர்/இணை இயக்குனர் (மகளிர் திட்டம்) வானதி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்கள் மணி கணேஷ், ராஜலட்சுமி, வட்டாட்சியர் மணி வாசகம், பயிற்றுநர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி