தர்மபுரி : தர்மபுரி மாவட்ட இறகுப்பந்து சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான இறகுப்பந்து போட்டி தர்மபுரியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் 2 நாட்கள் நடைபெற்றது. இந்த போட்டிகளில் 400-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் மற்றும் வீரர்கள் கலந்து கொண்டு விளையாடினர். இந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு தர்மபுரி மாவட்ட இறகுப்பந்து சங்க தலைவர் தண்டபாணி தலைமை தாங்கினார். சங்க செயலாளர் தனசேகர், பொருளாளர் கோபி, துணை செயலாளர் ரங்காதுரை, துணைத்தலைவர் சந்திரகுமார், மாவட்ட விளையாட்டு அலுவலர் சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இறகுபந்து பயிற்சியாளர் சந்தோஷ் வரவேற்றார். போட்டியில் வெற்றி பெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தொல்காப்பியன், ஆண்கள் இரட்டையர் பிரிவில் மதன், தொல்காப்பியன், மற்றொரு இரட்டையர் பிரிவில் மனோஜ்குமார், சந்திரகுமார் மற்றும் வெற்றி பெற்ற வீரர்கள்-மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திரு. கலைச்செல்வன், பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டு பேசினார். இந்நிகழ்ச்சியில் சங்க நிர்வாகிகள், வீரர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்