சேலம் : கோடை காலத்தில் வனப் பகுதிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் திடீர் தீ விபத்து ஏற்பட்டால் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்து சேதங்களை தவிர்க்க மேற்கொள்ள வேண்டிய உடனடி நடவடிக்கைகள் பற்றிய நேரடி தடுப்பு பயிற்சிகளை, தன்னார்வலர்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு தீயணைப்புப் படையினர் நேற்று அளித்தனர் .
இந்த நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரிகளும் மற்றும் வனத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர் இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தீயணைப்புத் துறை அதிகாரி மேலும் கூறுகையில்,” சேலத்தில் வனப்பகுதிகளில் திடீர் தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக அதை அணைத்து சேதங்களை தவிர்க்க தீயணைப்புத் துறை வனத் துறையும் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இன்று தன்னார்வலர்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு குடியிருப்பு பகுதிகளில் எதிர்பாராத வகையில் தீ விபத்து ஏற்பட்டால் அதை கட்டுப்படுத்தி அணைத்திட தேவையான பயிற்சி வழங்கப்பட்டுள்ளது வனப்பகுதிகளில் தீ விபத்து ஏற்படுவதை தடுக்கும் விதமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.
சேலம் மாவட்டத்தில் ஒவ்வொரு பகுதியிலும் தன்னார்வலர்கள் எங்களுடன் இணைந்து தீ விபத்துக்களை தடுக்க உதவும் வகையில் அவர்களின் தொடர்பு எண் வெளியிடப்பட்டுள்ளது.
எந்த பகுதியில் தீ விபத்து ஏற்பட்டாலும் உடனடியாக அந்த எண்ணிற்கு தகவல் தெரிவித்தால் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்து சேதங்கள் ஏற்படாமல் தடுப்பார்கள். ஏற்காடு போன்ற சுற்றுலாத் தலங்களுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் அடிவாரத்திலேயே இருந்து முழுமையாக பரிசோதிக்கப்பட்டு மலைமேல் செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
வனப் பகுதிகளுக்குள் அத்துமீறி நுழைந்து புகை பிடிக்க அனுமதி இல்லை. அதுபோல அத்துமீறி மலை பகுதிகளில் செல்பவர்களை கண்காணித்து அவர்களை வெளியேற்றி விடுகிறோம் ” என்று தெரிவித்தார்.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திருமதி. சூர்யா பிரியா
சேலம் மாவட்ட தலைவி
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா