திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காட்டில் முட்டுக்காடு டாக்டர் ஜெ ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் மீன்வள நிர்வாக மேலாண்மை பட்டப்படிப்பு பயிலும் முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவ மாணவியர்கள் செயல்முறை விளக்கப் பயிற்சி மேற்கொண்டனர். கல்லூரி முதல்வர் டாக்டர் பாலசுந்தரியின் உத்தரவின் பேரில் வணிக நிர்வாக இயல் திட்ட இயக்குனர் பேராசிரியர் வி.நாகஜோதி தலைமையில் 32 மாணவ மாணவிகள் ஆறு பேராசிரியர்கள் கொண்ட குழுவினர் பழவேற்காட்டிற்கு வருகை தந்து அங்குள்ள மீன் ஏல கூடத்தில் மீன்கள் இறால் நண்டு உள்ளிட்ட பழவேற்காடு கடலிலும் ஏரியிலும் மீனவர்களால் பிடித்து தரப்படும் மீன் இனங்கள் குறித்து விளக்கத்தை கேட்டு அறிந்தனர்.
மேலும் பழவேற்காட்டில் நடைபெறும் மீன்பிடித் தொழில் அதற்காக பயன்படுத்தப்படும் உபகரணங்கள் அங்கு நடைபெறும் சந்தைப்படுத்துதல், மீனவர்களுடைய வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார நிலை உள்ளிட்ட நிகழ்வுகள் குறித்து நேரடியாக அங்குள்ள மக்களிடம் கேட்டறிந்தனர். பழவேற்காடு அடுத்த தோனிரேவு பகுதியில் இயங்கி வரும் மீன் ஆராய்ச்சி நிலையத்தில் அலங்கார வண்ண மீன்கள் வளர்ப்பு குறித்தும் செயல்முறை விளக்கமும் பொன்னேரி டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழக பேராசிரியர்களால் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த விளக்கங்களை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் மௌலிதரன் மற்றும் இதர பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு