தூத்துக்குடி : கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாற்றத்தை தேடி மாணவிகளுக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி காவல்துணை கண்காணிப்பாளர் திரு . வெங்கடேஷ், தலைமை வகித்து மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பேசியதாவது. பள்ளியில் பயிலும் அனைவரும் குழந்தைகளே, கல்வி கற்க வேண்டிய வயதில் கல்வியையும், ஒழுக்கத்தையும் மட்டுமே கற்றுக் கொண்டு சாதனையாளர்களாக உருவாக வேண்டும். செல்போனில் தங்களது சுய விவரங்களை பதிவேற்றக்கூடாது, செல்போன் பயன்பாட்டை குறைத்துக் கொள்ள வேண்டும் என பேசினார்.
விழாவில் தலைமையாசிரியை ஜெயலதா வரவேற்றார்.
கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய குற்றவியல் ஆய்வாளர் திருமதி. மங்கையர்கரசி கலந்துகொண்டு மாணவிகளின் பிரச்சனைகளை களைவது குறித்தும், காவல்துறையில் உள்ள இலவச அலைபேசி எண்கள் குறித்தும், மாணவிகள் சாதிப்பதற்கு தேவையான வழிமுறைகள் குறித்தும் பேசினார். இந்நிகழ்ச்சியில் உதவி ஆய்வாளர்கள் திரு.சிலுவை அந்தோணி, திரு.அருள்மொழி, திருமதி. சத்யா, திருமதி.மகேஸ்வரி, திருமதி.மணிமேகலை, தலைமை காவலர்கள் திருமதி.ஜான்சிராணி, திருமதி. சத்தியபாமா, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் முத்து முருகன், உதவி தலைமை ஆசிரியை ரூத் ரத்னகுமாரி உட்பட பலர் கலந்து கொண்டனர். நிறைவாக இசை ஆசிரியை அமல புஷ்பம் நன்றி கூறினார்.