திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த வெள்ளம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக ஒரே ஒரு மனைவி படித்ததாக வந்த செய்தியை அடுத்து வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலமாக உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு. அந்தப் பகுதியில் மரங்களை வெட்டி வாழ்க்கையை நடத்திக்கொண்டிருந்த இருளர் இன மக்கள் பத்து குடும்பங்களில் இருக்கும் பிள்ளைகளை அழைத்து வந்து இந்த பள்ளியில் சேர்த்து தற்பொழுது படிக்க வைக்கின்றனர்.மேலும் அந்த இருளரின மக்களுக்கு பள்ளியின் அருகிலேயே குடிசைகள் அமைத்துக் கொடுத்து அவர்களின் பிள்ளைகளை படிக்க வைக்கும் படி வட்டார வளர்ச்சி அலுவலகம் கூறிய நிலையில் தற்போது இந்த பள்ளியில் 15 மாணவர்கள் படிக்கின்றனர். இந்த மாணவ மாணவியர்களுக்கு தன் ஆர்வலர் ASR விஸ்வநாதன் அவர்கள் புத்தகப்பை, நோட்டு புத்தகம் மற்றும் எழுது பொருள்கள் ஆகியவை அன்பளிப்பாக அளித்து நன்கு படிக்கும்படி கூறினார்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு