திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அ. பவன் குமார், இ. கா. ப., அவர்கள் உத்தரவின் பெயரில் சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அவர்களின் வழிகாட்டுதலின்படி சைபர் கிரைம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திருமதி. K.பாரதி அவர்களால்.
இன்று 24.11.2021 திருவண்ணாமலை சிஷ்யா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 450 மாணவர்களுக்கு இணைய வழி மூலமாக நடைபெறும் சைபர் குற்றங்கள் பற்றியும் ஆன்லைன் கேம் விளையாட்டின் மூலம் ஏற்படும் உயிர்சேதம் பண இழப்பு ஆகியவற்றினை பற்றியும்.
ஆன்லைன் குற்றங்கள் மற்றும் அதை தடுக்க மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள், பள்ளி மாணவர்கள் மற்றும் அங்கு பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் இணையவழி குற்றங்களை தடுக்கும் வழிமுறைகள் அடங்கிய நோட்டீஸ் வழங்கப்பட்டது.
சைபர் குற்றங்களில் இருந்து நம்மை பாதுகாத்துகொள்ள செய்ய வேண்டிய வழிமுறைகள் பற்றியும்
இணையவழி பணமோசடி பற்றிய புகார்களுக்கான கட்டணமில்லா உதவி எண் 155260 ஐ 24 மணி நேரத்திற்குள் தொடர்பு கொள்ளலாம் மற்றும்,
சைபர் குற்றங்களை பற்றிய புகாரை இணையவழியில் https://www.cybercrime.gov.in பதிவு செய்யலாம் என்பதை பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.