சேலம் : சேலம் மாவட்ட காவல்துறை சார்பாக மாவட்டம் முழுவதும் 10 சிறுவர் மற்றும் சிறுமியர் மன்றங்கள் உள்ளது. பொங்கல் திருநாளை முன்னிட்டு மேற்படி சிறுவர் மற்றும் சிறுமியர் மன்றங்களில் அந்தந்த பகுதி காவல் துறையினர் சார்பாக விளையாட்டுப் போட்டிகள் மற்றும் திறன் அறிவு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் சிறார் மற்றும் சிறுமிகளுக்கு இனிப்பு மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது.
மேற்படி நிகழ்வுகளில் சேலம் சரக டி.ஐ.ஜி திருமதி ராஜேஸ்வரி ஐ.பி.எஸ் அவர்களும் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சிவக்குமார் ஐ.பி.எஸ் அவர்களும் நேரடியாக கலந்து கொண்டு சிறுவர் சிறுமிகளை ஊக்கப்படுத்தினர். தற்போது சேலம் சரக காவல்துறை துணைத் தலைவராக பொறுப்பேற்றுள்ள திருமதி.ராஜேஸ்வரி ஐ.பி.எஸ் அவர்களின் உத்தரவின் பெயரில் மேற்படி மன்றங்கள் புத்துயிர் பெற்று இந்த வருடம் பொங்கல் திருநாளில் இத்தகைய நிகழ்வுகள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஜாபர்