சென்னை : நீட் தேர்வில் போட்டோ இல்லாததால், வெளியேற்றப்பட்ட மாணவருக்கு பணம் கொடுத்து போட்டோ எடுக்க உதவிய காவலர் திரு. சரவணகுமார். ஆதார் கொண்டுவர மறந்த மாணவனுக்கு கடைசி நேரத்தில் 20 கிலோமீட்டர் தொலைவிற்கு ஆட்டோவில் அழைத்து வந்த ஓட்டுநர் சரவணன் கடைசி நேரத்தில் மாணவர்களின் சிரமம் நீக்க உதவிய இரண்டு காக்கிச்சட்டை நல் உள்ளங்களுக்கும் பாராட்டுக்கள் குவிக்கின்றன.