தஞ்சாவூர்: தஞ்சாவூரில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று இரவு பணி முடிந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது சாலையின் குறுக்கே மாடு படுத்திருப்பது தெரியாமல் இரு சக்கர வாகனத்தில் வந்த சிறப்பு ஆய்வாளர் செந்தில்குமார் மாட்டின் மீது மோதியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த சிறப்பு சார்பு ஆய்வாளர் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சாலையில் சுற்றித் திரியும் மாடுகளால் இதுவரை 4 நபர்கள் உயிரிழந்துள்ளதாகவும் இது குறித்து மாநகராட்சி எச்சரிக்கை விடுத்தும் மாட்டின் உரிமையாளர்கள் கண்டு கொள்வதில்லை என பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி