மதுரை : மதுரை எஸ்.எஸ் காலனி போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் திலீபன், இவருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மாடக்குளம் கண்மாய் கரையில் ரகசியமாக கண்காணித்து வந்தார். அப்போது அங்கு கஞ்சா விற்பனை செய்த ஏழு பேரை சுற்றி வளைத்தார். அவர்களில் இருவர் தப்பி ஓடிவிட்டனர். ஐந்து பேரை பிடித்து அவர்களிடம் சோதனை செய்தார் சோதனையின் போது அவர்களிடம் 7 கிலோ 700 கிராம் கஞ்சா இருந்தது அவற்றை பறிமுதல் செய்து பின்னர் பிடிபட்டவர்களிடம் விசாரித்தபோது அவர்கள் புது ஜெயில் ரோட்டை சேர்ந்த அண்ணன் தம்பிகளான அந்தோணி மகன் ஜாக்கி என்ற பிரசாத் (22), பாண்டியராஜன் (23), திருப்பாலை அன்பு நகர் முருகன் மகன் முத்துகிருஷ்ணன் (24), வில்லாபுரம் உருவாட்டி மகன் ஈஸ்வரன் (35), ஜெய்ஹிந்த்புரம் வீரகாளியம்மன் கோவில் தெரு ஆறுமுகம் மகன் பாலசுப்பிரமணியன் (24), என்று தெரியவந்தது. அவர்கள் ஐந்து பேரையும் கைது செய்தார். தப்பி ஓடிய கல்மேடு பகுதியைச் சேர்ந்த ராகுல் என்ற விக்கி, விஜய் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி