தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை கடந்த 6 ஆண்டுகளுக்குப் பின் இடைவிடாமல் பெய்துவரும் தொடர் மழையால் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பெரு வெள்ளம், புயல், தொடர்மழை போன்ற பேரிடர் காலங்களில் பொது மக்களின் வீடுகள், தினசரி உபயோகப் பொருட்கள், வாழ்வாதாரம் போன்றவை இழந்து நிற்கும் சோதனையான காலகட்டத்தில் இருந்து வருகின்றனர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் மழை பரவலாக பெய்து வருகிறது. சென்னையை பொருத்தமட்டில் கடந்த சனிக்கிழமை முதல் தொடர்ந்து நகரின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதிலும் தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கி குளம் போல் காட்சி அளிக்கிறது. அதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
வடசென்னை பகுதிகளான பெரம்பூர், ஓட்டேரி, இராஜிவ் காந்தி நகர், புரசைவாக்கம், எழும்பூர், வில்லிவாக்கம் போன்ற பகுதிகளில் நீர் அதிக அளவில் தேங்கி உள்ளது. தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் இப்பகுதியில் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். அதன் தொடர்ச்சியாக நகரின் பல்வேறு பகுதிகளில் மோட்டார் மூலம் நீர் வெளியேற்றப்பட்டு தற்போது 177 இடங்களில் மட்டுமே நீர் தேங்கியுள்ளது. இதனால் பொதுமக்களுக்கு சாலையோர மக்களுக்கு உணவு கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. ஆகையால் அரசாங்கத்தோடு சேர்ந்து பல தொண்டு நிறுவனங்களும் ஆங்காங்கே உணவு சமைத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கி வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக போலீஸ் நியூஸ் பிளஸ், நியூஸ் மீடியா அசோசியேசன் ஆப் இந்தியா உடன் இணைந்து சமூக ஆர்வலர்கள் மற்றும் பத்திரிகை நண்பர்கள் சார்பாக சென்னை பெரம்பூர் உள்ள ராஜீவ்காந்தி நகர் பகுதியில் நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா தேசியத் தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின் படி, உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக (09.11.2021) செய்வாய்கிழமை, மதியம் 1:00 மணி அளவில் மதிய உணவு வழங்கப்பட்ட பகுதிகள் வடசென்னை, பெரம்பூர் ஓட்டேரி, இராஜிவ் காந்தி நகர், புரசைவாக்கம், எழும்பூர், வில்லிவாக்கம், திரு. விக. நகர் சாலையோரம் இருக்கக்கூடிய ஏழை எளிய மக்களுக்கு கைகளை சுத்தப்படுத்தி, சமூக இடைவெளியை ஏற்படுத்தி, முகக் கவசம் அளித்து, வெஜிடபிள் பிரியாணி, வழங்கப்பட்டது.
அதில் சமூக ஆர்வலர் எம். முகமது மூஸா மாநில வடக்கு ஊடகம் செயலாளர் மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் நிருபர், போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர் மற்றும் மானுட இயல் நிபுணர் அசீம், தமிழ்நாடு தகவல் அறியும் சமூக ஆர்வலர் சங்க மாநில பொதுச்செயலாளர் தேவேந்திரன் மற்றும் தகவல் தொழில்நுட்ப மாநில பொறுப்பாளர் விக்னேஸ், சேலம் மாவட்ட தலைவர் ஜாபர், திமுக திருவிக நகர் பகுதி செயலாளர் தமிழ்வேந்தன், 71 வது வட்ட கழக செயலாளர் புஷ்பராஜ் ஆகியோர்கள் கலந்து கொண்டனர். இந்த சமூக ஆர்வலர்கள் மற்றும் பத்திரிக்கையாளர் நடத்தும் 221 பொது நலத் திட்ட பணிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சமூக பணியை கொட்டும் மழையிலும் மிகுந்த சிரமங்களுக்கிடையே தண்ணீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு உணவு வழங்கி வருகிறார் நியூஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா சங்கத்தின் மாநில வடக்கு மண்டல ஊடக செயலாளர் திரு.முகமது மூசா அவர்கள். நியூஸ் மீடியா அசோசியேசன் ஆப் இந்தியா சங்கத்தின் உன்னதப் பணியினை சென்னைவாசிகள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.