திண்டுக்கல்: வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் காய்ச்சல் உள்ளிட்ட நோய் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிறப்பு மருத்துவ முகாம் தொடங்கப்பட்டுள்ளது. மழைக்காலங்களில் இயற்கையாக வரும் நோய்களான காய்ச்சல், சளி, வயிற்றுப் போக்கு, போன்ற பல்வேறு நோய்களில் இருந்து காப்பதற்காக முகாம் இன்று நடத்தப்பட்டுள்ளது. மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் தமிழ்நாடு சிறப்பு காவல்படை 14 வது அணி மற்றும் பழனி அரசு மருத்துவமனை இணைந்து சிறப்பு முகாமை நடத்தினர். இதில் commandant Tr.S. அய்யாசாமி,ADSP திரு.மங்களேஸ்வரன் மற்றும் D.S.P திரு.சதாசிவம் அரசு சித்த மருத்துவர் திரு.மகேந்திரன் கலந்து கொண்டனர்.