பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அலுவலகத்தில் தினமும் பொதுமக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி அவர்களை நேரில் சந்தித்து புகார் அளிக்க வருவது வழக்கம்.
இந்நிலையில் வழக்கம் போல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் புகார் மனுக்களை நேரில் பெற்றுக் கொண்டிருந்தபோது இறுதியாக மழலையுடன் ஒரு பெண் வந்திருந்தார்.
அப்போது அந்த மழலை காவல் கண்காணிப்பாளரை கண்டு சிரிக்க மாவட்ட காவல் கண்காணி்பபாளர் அந்த மழலை குழந்தையுடன் மழலையாக மாறி சிறுது நேரம் விளையாடிவிட்டு பின்னர் புகார் என்னவென்று கேட்டு தங்களது புகார் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்கிறேன் என வாக்குறுதி கொடுத்தார்.
அணிந்திருப்பது காக்கி சீருடையாக இருந்தாலும் மழலையையின் சிரிப்பைக் கண்டால் மனம் மாறாதோர் யாரும் இலர்.
என்றும் மக்கள் பாதுகாப்பிற்காக
பெரம்பலூர் மாவட்ட காவல்துறை