வேலூர்: லத்தேரி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட தொண்டான் துளசி எனும் மலை கிராமத்தில் 25 குடும்பங்களுக்கு காய்கறி, மளிகை பொருட்கள், கோதுமை மாவு பொட்டலம் ஆகியவை ஏழ்மையில் வாழும் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.
வேலூர் மாவட்ட நக்சல் சிறப்பு தடுப்பு பிரிவு சார்பாக காவல் ஆய்வாளர் திரு.இலக்குவன் தலைமையில், ஆசிரியர்கள் திரு.ஜெயகாந்தன், திரு.முகமது கவுஸ், மற்றும் அயல் நாட்டிலுள்ள திரு.முஸ்தாக் அகமது உதவியுடன் நேற்று திரு.பிரதீப், அருண் சுரேஷ் கிஷோர் மற்றும் உள்ளுர் பிரமுகர், முன்னாள் கவுன்சிலர் பரணி ரெட்டியார் ஏற்பாட்டில் சிறப்புடன் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் லத்தேரி உதவிஆய்வாளர் திரு.பிரகாசம், வட்ட எழுத்தர் மோகன் ஆகியோர் கலந்து கொண்டு ஊர் முழுவதும் மாஸ்க், விழிப்புணர்வு நோட்டீஸ் தந்தும் தடுப்பூசியின் அவசியத்தை வலியுறுத்தி பிரச்சாரம் செய்யப்பட்டது.