கடலூர்: கடலூர் மாவட்டத்தில் வசிக்கும் வயதான முதியோர்களின் நலன் கருதி கொரானா ஊரடங்கு காலகட்டத்தில் உதவிகள் ஏதேனும் தேவைப்பட்டால் மாவட்ட காவல் அலுவலகம் தொலைபேசி எண் 04142- 284350, 284345 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டால் காவல்துறை சார்பில் உதவிகள் மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தகவல் தெரிவித்ததின்பேரில் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி எம். ஆர். கே .நகர் பகுதியைச் சார்ந்த முருகவேல் என்பவர் உணவு இல்லாமல் கஷ்டப்படுவதாக தெரிவித்தார்.
திருப்பாபுலியூர் காவல் நிலையம் அமுதா வயது 50, உடல் ஊனமுற்றவர் நாதன்நாயகிநகர் திருப்பாதிரிபுலியூர் என்பவர் மளிகை பொருட்கள் இல்லாமல் கஷ்டபடுவதாகவும் தெரிவித்தார்.
கடலூர் காவல் நிலையம் வயதான முதியோர்கள் ஸ்ரீதரன் வயது 67, S/O, கனகராஜ், பிள்ளையார் கோவில் தெரு, தேவனாம்பட்டினம், மற்றும் அவரது மனைவி ஜோதி வயது 60 , W/O, ஸ்ரீதரன் (இருவரும் சர்க்கரை நோயாளிகள் ) இருவரும் மருந்துகள் வாங்க முடியாமல் உள்ளதாகவும் தெரிவித்தார்கள்.சக்திவேல் வயது 44, த/பெ செல்வராசு, புதுக்காலனி ,கூடலூர் ,திட்டக்குடி என்பவர்வீட்டிற்கு தேவையான மளிகை, காய்கறி இல்லாமல் கஷ்டப்படுவதாக தெரிவித்ததன் பேரில் மாவட்ட காவல்துறை சார்பில் உதவிகள் வழங்கப்பட்டது.