சேலம் : சேலம் மாவட்டம், ஓமலூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட தாராபுரம் என்ற பகுதியில் உள்ள ஒரு கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்வதாக காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பெயரில் ஓமலூர் காவல் ஆய்வாளர் திரு.செல்வராஜன், உத்தரவின் பெயரில் தலைமை காவலர் திரு.ஐயப்பன் சென்று மல்லிகை கடையில் சோதனை செய்தபோது அந்த கடையில் குட்கா பொருள்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. குட்கா விற்றா கடை உரிமையாளர் பாலாஜி (34). என்பவர் தெரிந்தது. பாலாஜி மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஹரிஹரன்