திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு துறை சார்பாக மலை வாழ் பகுதிகளில் உள்ள மாணவ மாணவர்களை அரசு வேலையில் பணியமர்த்தும் நோக்கில் பல்வேறு அரசு பயிற்சி வகுப்புகள் (TNPSC) மற்றும் பல்வேறு அரசு துறையை அறிந்து கொள்ளும் வகையில் அங்கு நேரிடையாக சென்று பார்வையிட்டும், அதிகாரிகளுடன் கலந்துரையாடியும் பயன்பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிகள் மூலம் மாணவ மாணவிகளை ஊக்குவித்து வருகிறார்கள்.
இதன் அடிப்படையில் மலைவாழ் பகுதி மாணவ, மாணவிகள் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வருகை தந்திருந்தனர். அவர்களுடன் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மணிவண்ணன் இ.கா.ப.,அவர்கள் கலந்துரையாடினார்.
அப்போது இளைஞர்கள் உயர்ந்த லட்சியத்தை அடைய எவ்வாறு பயில வேண்டும் என்பது குறித்தும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பயின்ற அனுபவத்தை விளக்கிக் கூறியும், இதேபோல் நீங்கள் அனைவரும் முன்னேற வேண்டும் என்று மாணவ மாணவிகளுக்கு உத்வேகம் அளித்தார்.
மேலும் வேலைவாய்ப்பு துறை மூலம் உங்களுக்கு நல்ல அரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது இதனை நீங்கள் முழுமையாக பயன்படுத்திக் கொண்டு அரசு துறை தேர்வுகளில் (IAS, IPS, GROUP1, TNPSC) வெற்றி பெற்று வாழ்வில் வெற்றி அடைய வேண்டும் என வாழ்த்தினார்.
இந்நிகழ்ச்சியில் வேலைவாய்ப்பு துறை உதவி இயக்குனர் அந்தோணி, வேலை வாய்ப்பு துறை இணை இயக்குனர் திருமதி.ஜோதி மணி மற்றும் திருநெல்வேலி ஊரக உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திருமதி.அர்ச்சனா, ஆகியோர் கலந்து கொண்டனர்